FAQs

Stone formation in the urinary tract is a complex phenomenon as there is interaction between various substances that are normally excreted in urine. However it can be postulated that increased concentration of stone forming substances (Calcium, oxalate, uric acid) in the urine can lead to stone formation. Thus failure to drink adequate quantity of water is an important cause for stone formation Also increased intake of these stone forming substances from food, increased absorption from intestines are also other causes for stone formation.

Severe, intermittent, colicky abdominal pain lasting for 45mins to 2hours making the patient roll on the ground is the typical symptoms of kidney stone. Pain is generally relieved with pain killers. Pain may be associated with vomiting and passage of blood in urine. Painful urination and fever with chills due to urinary tract infections are the other symptoms.  Some patients who are having large stones can be without any symptoms and stones are diagnosed incidentally when investigated with scan for some other symptoms or during regular health checkups.

X-ray KUB, Ultrasound scan and CT scan are the commonly done investigations to diagnose kidney stones. CT scan is the most accurate and can detect stones not diagnosed on Xray KUB & ultrasound.

There are no effective oral medications to dissolve kidney stones.

For small size stones less than 8mm medical treatment with pain killers, IV fluids for vomiting are advised for a period of 2 to 3weeks. If stones fail to pass out during this period endoscopic removal is generally advised.  Endoscopic stone removal is advised for stones larger than 8mm. ESWL was popular few years ago for stones less than 1.5cm. ESWL is non invasive but the stone clearance with this treatment is not assured. Also the time taken for stone clearance with ESWL treatment is 4 to 6 weeks. Hence with the availability of advanced and smaller size endoscopes, endoscopic stone removal is preferred by most patients as the success rates are high and the results are immediate.

Stone recurrence rates in patients with kidney stones can be as high as 50% within 5years., Hence it is important to have regular follow up, dietary modifications and medical intervention to prevent recurrent stone formation.

For recurrent stone formers it is very essential to do stone analysis to identify the type of stone. Also a series of blood and urine tests (Metabolic evaluation) are done to identify the root cause for stone formation. Prescribing diet and medicines based on these tests can prevent stone formation.

Diabetes mellitus & hypertension are the commonest cause of kidney failure. However long standing stone disease affecting both kidneys or solitary functioning kidney can cause kidney failure. Kidney failure caused by stone disease is preventable with timely treatment of kidney stones.

Kidney stones can be prevented by ensuring adequate intake of water and reducing intake of oxalate, salt and non vegetarian food. Adequate intake of water means urine output per day should be more than 2 litres. Generally 3 litres of water intake per day is sufficient but persons exposed to hot environment (Goldsmiths, welders & cooks etc) may have to take more than 3litres of water / day.  Predisposing factors (GI diseases, RTA, Hyperparathyroidism, obstructive uropathy, UTI) should be identified and treated to prevent stone formation.

Diabetes mellitus and hypertension are the systemic illnesses which commonly affect the kidneys. Early diagnosis of these conditions, regular treatment and periodic check up by family physician are essential for good control of blood sugar and blood pressure. The only way for early diagnosis of these is to get blood sugar and blood pressure checked, every six months above the age of 30years as diabetes and hypertension generally do not cause any symptoms. Failure to diagnose these diseases in time can lead to kidney damage silently. Misuse of pain killers is another important causes for kidney failure. Always take pain killers under supervision of your doctor. Smoking and alcohol intake are not good to your kidneys. In general keeping a healthy lifestyle (proper food,exercise, rest) keeps your kidneys healthy. As your kidneys and heart are linked to each other, keeping your kidneys healthy also prevent cardiac illness.

  • Drink 4 litres water per day 
  • Do not smoke
  • Reduce your salt intake. The recommended sodium intake is 5-6 grams of salt per day 
  • Do not take over-the-counter pills on a reular basis like ibuprofen, paracetamol and acetaminophen 
  • Limit your alcohol intake. 
  • Keep regular control of your blood sugar & hypertension level 
  • Excercise regularly 
  • Get your kidney function checked if you have one or more of the high risk factors as given below a)Diabetes mellitus b)Hypertension c)Obesity d) one of your parents or other family members suffers from kidney disease  
  • Eat healthy, balanced diet.

சிறுநீரில் உள்ள தேவையற்ற வேதிப்பொருட்களை வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. ஒருவர் ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. ஒருவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் இந்த தேவையற்ற வேதி உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து , படிந்து சிறுநீரக கற்களாக உருவாகின்றது.

கடுமையான வயிற்று வலி , குமட்டல், வாந்தி ,நீர்க்கடுப்பு , மற்றும் குளிர் காய்ச்சல் ஏற்படலாம் . சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் சிறுநீரக கல் பாதிப்பு இருக்கலாம் .

சிறுநீர்கக் கற்களுக்கான பரிசோதனைகளிலேயே மிகவும் உபயோகமுள்ள பரிசோதனை சி.டி. ஸ்கேன் ஆகும். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் கூட தெரியாத கற்களும் இந்த ஸ்கேனில் மிகத் துல்லியமாகத் தெரிந்து விடும்.

கிட்னி ஸ்டோனை கரைக்க முடியாது. இதுவரை அப்படி ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுவாக சிறிய அளவிலான கற்கள் (< 8 mm) தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீர் வழியாகவே வெளியேறிவிடும். சிறுநீரகக் கல்லின் அளவு மற்றும்  கல் இருக்கும் இடத்தை பொறுத்து சிகிச்சை தேவைப்படும். தற்போதுள்ள நவீன எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை மிகத் துல்லியமாக அகற்ற முடியும். ஆகையால் இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை என்பது அறவே தேவையில்லாமல் போய் விட்டது.

ஒரு முறை கிட்னி கிட்னி ஸ்டோன் பிரச்சனை ஏற்பட்டால் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீரக கல் அடைப்பு ஏற்பட்டால் எந்த வகையான கல் உருவாகின்றது என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் கல் அடைப்பு ஏற்படாமல் கண்டிப்பாக தடுக்க முடியும்.

நாள்பட்ட கல் அடைப்பு மற்றும் சரியான சிகிச்சை இல்லாவிட்டால் கிட்னி பெயிலியர் ஆகும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதாலும் (3 லிட்டர்), ஆக்ஸலேட் அதிகமாக உள்ள உணவுகள்,உப்பு, மாமிசம் மற்றும் மாவு சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பதாலும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கலாம்.

  மது மற்றும் புகை பழக்கம் சிறுநீரகத்தின் மிக முக்கிய எதிரிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரை நோய் , இரத்தக் கொதிப்பு (BP) சிறுநீரகத்தின் எமன் என்பது பலர் அறியாத ஒன்று. ஆகவே சர்க்கரை , இரத்தக் கொதிப்பு நோய் இருப்பின் முறையான சிகிச்சை பெற வேண்டும். மேலும் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு நோயை கட்டுப் பாட்டிற்குள் வைக்க வேண்டும் .இல்லையென்றால் இவையே கிட்னி பெயிலியர் ஏற்பட வழி வகுக்கும். மேலும் வலி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொண்டாலும்கிட்னி பெயிலியர் ஆகும். சிலர் பிறவியிலேயே ஒரு கிட்னியுடன் பிறக்கக் கூடும் அல்லது அறுவை சிகிச்சை செய்து ஒரு கிட்னியை அகற்றிய பின் ஒரு கிட்னி மட்டும் இருப்பின் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருத்தல் அவசியம். தினமும் முறையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். சிறுநீரகத்தை பாதுகாப்பதன் மூலம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் சிறுநீரகமும்,இருதயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

  • புகை பிடிக்காதீர்.
  • ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
  • உணவில் உப்பின் அளவை (5-6 கிராம்) குறைக்கவும்.
  • வலி நிவாரணிகளை தொடர்ச்சியாகவோ அல்லது மருத்துவர் பரிந்துரை இன்றியோ எடுக்க வேண்டாம். வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக எடுத்தால் சிறுநீரக செயல் இழப்பு நோய் (கிட்னி பெயிலியர்) ஏற்பட வாய்ப்பு உள்ளது
  • மது அருந்துதலை தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் இரத்த அழுத்தத்தையும் , இரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
  • கீழ்கண்ட காரணிகள் இருப்பின் உங்கள் சிறுநீரக செயல்பாட்டை சீரான இடைவெளி அல்லது மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப பரிசோதித்து கொள்வது அவசியம் a) சர்க்கரை நோய் b) உயர் இரத்த அழுத்தம் (பிளட் பிரஷர்) c) உடல் பருமன் d) உங்கள் குடும்பத்தில் யாரேனும் சிறுநீரக செயல் இழப்பு நோயினால் (கிட்னி பெயிலியர்) பாதிக்கப்பட்டிருந்தால்
  • தினமும் உடல் பயிற்சி செய்யவும்
  • சத்தான உணவுகளை உட்கொள்ளவும்

சிறுநீரக கற்கள் எவ்வாறு ஏற்படுகின்றன ?

 

நமது சிறுநீரகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று என்னவென்றால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்புகளை சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது. நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பட்சத் தில் அதாவது ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பொழுது தேவையற்ற உப்புக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன நாம்போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நேரத்தில் இவ்வகையான உப்புக்கள் சிறுநீரகத்தில் படிமங்களாக படிகின்றன அவ்வாறு படிந்து , படிந்து பின் அவை கற்களாக உருவாகின்றன .சிறுநீரகக் கற்களிள் 4 வகைகள்உள்ளன் அவை கால்சியட் ஆக்ஸலேட் ,யூரிக் ஆசிட் ,சிறுநீர் தொற்றால் ஏற்படும் ஸ்ட்ரூவைட் கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்கள் ஆகியவை.

 

சிறுநீரககற்கள் உள்ள நோயாளிகளுக்கான உணவு முறைகள்.

  • இளநீர் : இளநீரில் பொட்டாசிம் மற்றும் மக்னிசியம் அதிக அளவில் இருப்பதால் கற்கள் உருவாதலை  தவிர்க்க உதகிறது.
  • கேரட் : இவை தாது பொருட்களை பெருமளவு கொண்டுள்ளன .இத் தாதுபொருட்கள் கற்கள் உருவாதலை தடுத்து நிறுத்துபவைகளாக பணியாற்றுகின்றன.
  • பாகற்காய் : இவை தாது பொருட்களை பெருமளவு கொண்டுள்ளன. இத் தாது பொருட்கள் கற்கள் உருவாகுவதை தடுத்து நிறுத்துகின்றன.
  • வாழைப்பழங்கள் : இவற்றில் வைட்டமின் B6 நிறைந்துள்ளது இவை உடலில் உள்ள ஆக்ஸரலிக் அமிலத்தை தகர்த்து அதன் மூலம்கற.கற்கள் உருவாவதை தடுக்கின்றன. 
  • எலுமிச்சை : இவற்றில் சிட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் கால்சியம் ஆக்ஸலேட்டுகள் கற்கள் உருவாகுவதை தவிர்க்கின்றன.
  • அன்னாசிப் பழ ஜூஸ் : இதில்உள்ள என்ஸைம்கள் ,பைப்ரின்களை உடைத்து அதன்மூலம் சிறுநீரகற்கள் உருவாகுவதை தவிற்கின்றன.
  • பார்லி : இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கல் தடுப்பான்களை பெருமளவு கொண்டுள்ளன.
  • ஒட்ஸ் : இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கல் தடுப்பான்கனை பெருமளவு கொண்டுள்ளன. கோதுமை இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கல் தடுப்பான்கனை பெருமளவு கொண்டுள்ளன.

சிறுநீரகக்கற்கள் உள்ளவர் கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள்:

  • பச்சைக்கீரை வகைகள் : இவை உயர் ஆகஸலேட் கூறுகளைக் கொண்டதால் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம்.
  • காலிஃபிளவர் : இவை உயர் யூரிக்,ப்யூரைன் கூறுகளைக் கொண்டிருப்பதால் கற்களை உருவாக்கலாம்.
  • கத்திக்காய் : இவை உயர் யூரிக்,ப்யூரைன் கூறுகளைக் கொண்டதால் கற்களை உருவாக்கும்.
  • காளான் : இவை உயர் யூரிக், ப்யூரைன் கூறுகளைக் கொண்டதால் கற்களை உருவாக்கும்.
  • சப்போட்டா : இவை உயர் ஆகஸலேட் கூறுகளைக் கொண்டதால் சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.
  • திராட்சை : இதில் ஆக்ஸலேட் கூறுகள் அதிகம் உள்ளதால் சிறுநீரகக்கற்களை உருவாக்கலாம்.
  • பூசணிக்காய் : இவை உயர் யூரிக்,ப்யூரைன் கூறுகளைக் கொண்டதால் கற்களை உருவாக்கலாம்.
  • ஆட்டு இறைச்சி : இவை உயர் யூரிக்,ப்யூரைன் கூறுளைக் கொண்டதால் கற்கள் உருவாக்கலாம்.
  • கோழி இறைச்சி : இதில் அதிக அளவு ப்யூரைன்,யூரிக்கூறுகள் உள்ளது.எனவே சிறுநீரகக் கற்கள் உருவாக்கலாம்.
  • மீன் : இவற்றில் யூரிக்,ப்யூரைன் கூறுகள் அதிகம் உள்ளது.ஆகையால் இவை சிறுநீரகக் கற்களைஉருவாக்கலாம்.
  • முட்டை : இதில் யூரிக், ப்யூரைன் கூறுகள் அதிகமாக உள்ளது. எனவே இவை கற்களை உருவாக்கலாம்.
  • சாக்லேட் : இதில் ஆகஸலேட் கூறுகள் அதிகம் உள்ளது.எனவே இவை சிறு நீரகக்கற்களை உருவாக்கலாம்.
  • குளிர் பானங்கள் : கோலா ,பெப்சி ஆகிய குளிர் பானங்களில் ஆக்ஸலேட் கூறுகள் மிக அதிகமாக உள்ளன .இவை கற்களை உருவாக்கலாம். 
  • காபி, டீ : இதில் ஆக்ஸலேட் கூறுகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.
  • முந்திரி பருப்பு : இதில் ஆக்ஸலேட் கூறுகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.
  • ஆப்பிள் ஜூஸ் : இதில் ஆக்ஸலேட் கூறுகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.

ஒவ்வொரு நாளும் 3 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்க இயலும். நல்ல தண்ணீர் அருந்துவது நல்ரது.உப்புத்தண்ணீராக இருக்கும் பட்சத்தில் குடிக்கும் முன் போதுமான அளவு கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.ஒரு முறை சிறுநீரகக் கல் நோய் ஏற்படின் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் சற்று அதிகம். ஆகையால் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறுநீரகக் கல்லினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்தல் நலம்.

"தண்ணீர் குடிப்போம், கல் அடைப்பைத் தவிர்ப்போம்"

  • காய்கறிகளை நன்கு வேகவைத்து அதன் தண்ணீரை நீக்கி விட வேண்டும் 
  • நிதானமாக சாப்பிட வேண்டும் 
  • இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே சாப்பிட வேண்டும் 
  • சாப்பாட்டில் அரை உப்பு மட்டும் சேர்க்க வேண்டும்
  • கண்டிப்பாக சாப்பாட்டில் அரை உப்பு மட்டுமாவது சேர்க்க வேண்டும்
  • முக்கால் பங்கு வயிறு நிறையும் வரை மட்டும் சாப்பிட வேண்டும் 
  • உணவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உண்ண வேண்டும்
  • அதிக இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். 
  • ஆப்பிள் , கொய்யா , பப்பாளி , பேரிக்காய் மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவைகளில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் வாரத்திற்கு இரண்டு முறை உண்ணலாம்
  • அரை கப் பயறுகள் அல்லது பருப்பு வகைகள் வாரத்திற்கு இருமுறை  (அல்லது) 200 மில்லி ஏடு நீக்கிய கொழுப்பு சத்து குறைவான பால் அல்லது 200 மில்லி  ஏடு நீக்கிய தயிர் ஆகியவற்றிக்கு பதிலாக பயன்படுத்தலாம் 
  • 50 சதவிகித புரதச் சத்து நல்ல தரமான புரோட்டின் உணவிலிருந்து பெற வேண்டும் 
  • போதுமான அளவு கலோரிகள் உட்கொள்வது மிகவும் அவசியம்.
  • மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப நீர்ச்சத்து உள்ள திரவ உணவுகளை உண்ணவேண்டும், 
  • வெளியேறும் சிறுநீரின் அளவை பொறுத்ததே குடி நீரின் அளவும் நிர்ணயம் செய்யப்படும் என்பதால் குடிக்கும் நீரின் அளவையும் , வெளியேறும் சிறுநீரின் அளவையும் கவனமாக குறித்து கண்காணித்து உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். (காபி , டீ , ரசம் , சாம்பார் ஆகியவையும் நீர்ச்சத்து உள்ளவையே. )
  • சிறுநீரக நோயாளிகள் பொட்டாசியம் , சோடியம் அளவை அறிந்து அதற்கேற்ப உணவினை உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச் சத்து நிபுணர் ஆலோசனையுடன் உட்கொள்தல் நன்று 

தவிர்க்க வேண்டியவை

  • பொட்டாசியம் அதிக அளவில் உள்ள பழ வகைகள்- வாழைப்பழம், அவகோடா பழம், சக்கரை வள்ளி கிழங்கு, மாதுளை பழம், பீட்ரூட்
  • வெல்லம், இளநீர் , சாக்லேட், காபி, ஹார்லிக்ஸ் மற்றும் கோகோ பவுடர் 
  • கொட்டை வகைகள் , உலர்ந்த பழங்கள்- பேரிச்சை , உலர்ந்த திராட்சை , அத்திப்பழம் , பாதாம் , முந்திரி பருப்பு , பிஸ்தா , 
  • காற்று புகாத வண்ணம் பையிலோ அல்லது டின்னிலோ அடைத்து உப்பிட்டு பாதுகாக்கப்பட்ட ,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • சோடா உப்பு , பேக்கிங் பவுடர் , அஜினோ மோட்டோ , பாப் கார்ன் 
  • மசாலா பொருட்களை தவிர்த்தல் நன்று
  • வத்தல் , வடகம் , ஊறுகாய் , அப்பளம் கருவாடு , கேக் , சாஸ் , உப்பு பிஸ்கட்டுகள் தவிர்த்தல் நன்று 
  • பெப்சி , கோலா ஆகிய குளிர் பானங்களை தவிர்த்தல் நன்று.

முதியோருக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் பிரச்சனை


ப்ராஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்ப்பை வாயை சுற்றி இருக்கும் ஒரு சிறிய உறுப்பு .  வயதாகும் பொழுது நமது உடலில் உள்ள அநேக உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன .முடி வெளுக்கிறது ,தோலில் சுருக்கம் விழுகிறது கண்களில் காடராக்ட் (புறை) ஏற்படுகிறது.இதே போல் வயதாகும் பொழுது ஆண்களுக்கு  சிறுநீர்ப்பையிலும் ,ப்ராஸ்டேட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .இந்த மாற்றங்களினால் ஏற்படும் சிறுநீர் கழிக்கும் சிரமங்களே  பொதுவாக ப்ராஸ்டேட் பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது .  ப்ராஸ்டேட் பிரச்சனை வயதான காலத்தில் மிக அதிகமாக காணப்படுகிறது.வயதாக வயதாக இந்த வியாதியால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கூடுகிறது.பொதுவாக 55 வயதில் 25% ஆண்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்.75 வயதில் 50% ஆண்களுக்கு இந்த வியாதியின் தாக்குதல்தென்படுகிறது.

இந்த வியாதியால் ஏற்படும் அறிகுறிகள்


  • சிறுநீர் மெலிதாக சொட்டு சொட்டாக வெளியேறுதல்.
  • சிறுநீர்  விட்டு விட்டு வெளியேறுதல்.
  • சிறுநீர்கழிக்கும் போது மிக்க வேண்டி இருத்தல்.
  • சிறுநீர் வெளியேற நேரமாகுதல்.
  • சிறுநீர்வெளியேற முடியாமல் போவது.
  • சிறுநீர் அடிக்கடி கழித்தல்.
  • சிறுநீர் அவசரமாக வெளியேறுதல்.
  • சிறுநீர் நோயாளி யின் கட்டுப்பாடின்றி வெளியேறுதல்.

மருத்துவரின் ஆலோசனை அவசியமா?


ப்ரோஸ்டேட் பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியமாகிறது. ப்ராஸ்டேட் பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், சிறுநீர் வேகம் அளக்கும் பரிசோதனை, இரத்ததில் (PSA) அளவு, ஆகியவை மருத்துவரின்; ஆலோசனைபடி செய்து கொள்வது அவசியம்.  ப்ராஸ்டேட் புற்று நோயால் ஏற்படும் அறிகுறியும் சாதரன ப்ராஸ்டேட் கட்டியால்ஏற்படும் அறிகுறியும் ஒன்றே.  *ஆகவே வயதான ஆண்களுக்கு சிறுநீர்கழிக்கும் சிரமங்கள் ஏற்படும் பொழுது மருத்துவரிடம்  பரிசோதித்து  அந்த நபருக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய்  தாக்கம் இல்லையென்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிகிச்சை முறைகள்


ஒரு காலத்தில் ப்ராஸ்டேட் பிரச்சனை யால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு எண்டோஸ்கோப்பி அல்லது அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ இப்பிரச்சனைக்கு வீரியமான மாத்திரைகள் உள்ளன. ஆகையால் பெரும்பாலான முதியோர்கள் தற்பொழுது மாத்திரையால் குணமடைகிறார்கள். இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்வது அவசியம் ஆகிறது. எண்டோஸ்கோப்பி மூலம் சிறுநீர் பாதை வழியாக ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றுதலே TURP ஆகும். சிறுநீர் கழிக்கும் சிரமங்கள் அதிகமாக இருந்தாலோ அல்லது மாத்திரைகளால் பலன் இல்லாமல் இருந்தாலோ அல்லது சிறுநீர் பாதை முழுமையாக அடைத்துக் கொண்டாலோ TURP அவசியமாகிறது.  ப்ராஸ்டேட் கட்டி எண்டோஸ்கோப்பி முறையில் அகற்றப்பட்டாலும் இந்த கட்டியின் அளவு பெரியதாக இருக்கும் பட்சத்தில் (60 கிராமுக்கு மேல்) இந்த எண்டோஸ்கோப்பி சிகிச்சை ஒரு மேஜர் ஆப்பரேசனுக்குச் சமம் ஆகும்.TURP சிகிச்சையின் பொழுது சிலருக்கு இரத்தக்கசிவு ஏற்படலாம். சிகிச்சைக்குப் பின் மலச்சிக்கலை தவிர்ப்பது அவசியம். 2 அல்லது 3 வாரம் முழு ஒய்வும் அவசியம். சில முதியவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் சிரமங்கள் ப்ராஸ்டேட் அடைப்பினால் இல்லாமல் சிறுநீர்ப்பையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படக்கூடும். அவர்களுக்கு TURP சிகிச்சை பலன் அளிக்காது.  Urodynamic study பரிசோதனை செய்து ஒரு நபருக்கு TURP சிகிச்சை பலன் அளிக்குமா? அளிக்காதா ? என்று துல்லியமாக கண்டறிய முடியும்.

WRITE A REVIEW